ஜோகூர் பாரு, செப்டம்பர் 26:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூர் மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக நிவராண மையங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 59 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 194 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இவ்வெள்ளம் பத்து பஹாட் மற்றும் பொந்தியான் ஆகிய இரண்டு மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.
நேற்று காலை 6.30 மணியளவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரு மாவட்டங்களில் ஒன்பது பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக JPBD தெரிவித்துள்ளது.









