6 மாதங்களுக்குப்பின் சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை; தங்கராஜூ சுப்பையாவிற்கு 26 ஆம் தேதி தூக்கு …!

சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜூ சுப்பையா (வயது 46) என்பவருக்கு, வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கராஜூவை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக, மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் கோகிலா அண்ணாமலை தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கடுமையாக எடுத்து வரும் சிங்கப்பூர் அரசு, கடந்த ஆண்டு மட்டும் 11 பேரை இந்த வழக்கில் தூக்கில் போட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here