அம்னோவின் முக்கிய 5 தலைவர்கள் GE15 பற்றி விவாதிக்க கூடினரா?

கோலாலம்பூர்: அம்னோவின் முக்கிய ஐந்து தலைவர்களின் கூட்டம் 15ஆவது பொதுத் தேர்தலின் (GE15) நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அம்னோ துணைத் தலைவர் காலிட் நோர்டின் சுருக்கமான முகநூல் பதிவின்படி, கூட்டம் பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கியது என்றார்.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் மூன்று துணைத் தலைவர்கள் – காலிட், மஹ்திசீர் காலித் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோப் – உடன் இருக்கும் படத்தை அவர் வெளியிட்டார். இந்த முக்கிய  5 பேரின் சந்திப்பிற்கு பிறகு, இன்று மாலை உச்ச மன்றக் கூட்டம் கூடும்.

முன்னதாக கட்சியின் தெரெங்கானு, பகாங், பேராக் மற்றும் சிலாங்கூர் தலைவர்கள், அஹ்மட் சைட், வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், சாரணி முகமது மற்றும் நோ ஓமர் ஆகியோர் முறையே, கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள அம்னோவின் தலைமையகமான மெனாரோ டத்தோ ஓன் லாபி வழியாக உள்ளே நுழைவதைக் காண முடிந்தது.

GE15 அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சில அம்னோ தலைவர்கள் அதை இந்த ஆண்டு  பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here