4 அம்சங்களை முன்வைத்து வரையறுக்கப்பட்டுள்ள

2023 வரவு செலவுத் திட்டமானது, மக்கள், அரசாங்கம், வர்த்தகம், பொருளாதாரம் என நான்கு அம்சங்களை முன்வைத்து வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த பெருந்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் கடுமையான வீழ்ச்சியைத் தவிர்ப்பதற்கு பொருளாதாரத் துறைகளில் மில்லியன் கணக்கில் தொகை ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது.அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரம் துரிதமாக மீட்சிபெறத் தொடங்கியது. குறிப்பாக 2021ஆம் ஆண்டு 3.1 விழுக்காடு வரை மேம்பாடு அடைந்தது.இந்த அடைவு நிலையானது பல்வேறு பொருளாதார விரிவாக்கத் திட்டங்கள், உதவிகள், நிதி ஒருங்கிணைப்பு கொள்கையின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களின் மேம்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு இந்தக்காலகட்டமானது எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள மலேசியாவை வலுப்படுத்துவதற்கான நேரமாகக் கருதப்படுகிறது.இந்த 2023 வரவு செலவுத் திட்டத்தை வரையறுத்து உறுதி செய்யும்போது அரசாங்கம் இது சார்ந்து பொதுமக்கள், முக்கியத் தரப்பினரின் கருத்துகளைப் பெறவும் அவ்வப்போது கூட்டங்களை வழி நடத்தியது.

2022 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட துறைகள்

இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மூன்று கொள்கைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மீட்சி, தாங்கும் சக்தி, உருமாற்றம் ஆகியவை அந்த மூன்று அம்சங்களாகும்.அந்த மூன்று கொள்கைகளானது மக்களின் நல்வாழ்வு, நிலைபெறும் வர்த்தகம், ஆரோக்கியமான பொருளாதாரச் சூழல் ஆகிய மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.அந்தக் கொள்கையின் வாயிலாக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 332.1 பில்லியன் ரிங்கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் ஏற்பாடு செய்து தரப்பட்ட அதிகத் தொகையாகும்.இதன்வழி அரசாங்கம் வலுவான பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைத் தெளிவு படுத்துகிறது.

2022 வரவு செலவுத் திட்டத்தில் முதன்மை முன்னெடுப்புகளின் இப்போதைய நிலை

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள், வர்த்தகம், பொருளாதாரம் போன்ற மூன்று முக்கிய அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக பிரதமர் தலைமையிலான 2022 வரவு செலவுத் திட்ட கண்காணிப்புச் செயற்குழு தோற்றுவிக்கப்பட்டு நிதி அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன்வழி 112.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டின் வழி 282 வியூகத் திட்டங்களைக் கண்காணிக்க முடிகிறது.குறிப்பாக 4.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டின் வழி 6 லட்சம் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய மலேசிய வேலை வாய்ப்புத் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தின் வழி ஏப்ரல் 2022  வரையில் 149,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.இது தவிர செமாராக் நியாகா திட்டத்தின் கீழ் 40 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டு வர்த்தகங்களை நிலைபெறச் செய்வதற்கும் மீட்சி பெறச் செய்வதற்கும் வழி ஏற்படுத்தித் தரப்பட்டது.இந்தத் திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் பயனடைந்துள்ளன.கூடுதலாக மலேசியக் குடும்ப உதவித் திட்டத்தின் வழி 8.6 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு 1.9 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர தலா ஒருவருக்கு 150 ரிங்கிட் நிதி வழங்கப்படும் ஈ பெமுடா திட்டத்தின் வழி 1.7 மில்லியன் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.மொத்தத்தில் ஏப்ரல் 2022 வரையில் இந்தச் செயற்குழு கண்காணித்து 282 வியூகத் திட்டங்களில் 257 திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here