தித்திவங்சா தொகுதியில் பி40 இந்திய சமூகத்தினர் வாழ்க்கை வளம்பெறப் பாடுபடுவேன்

நாட்டில் உற்று கவனிக்கப்படும் பரபரப்பான தொகுதிகளுள் ஒன்றாகத் திகழும் கூட்டரசுப் பிரதேசத்தின் தித்திவங்சா தொகுதியில் தேசிய ணின்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜொஹாரி அப்துல் கனி.

ஒரு கணக்கியல் நிபுணரான (அக்கவுண்டன்) அவர் தித்திவங்சா தொகுதியை உள்ளடக்கிய கம்போங் பாண்டான் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே ஆரம்ப – இடைநிலைக்கல்வியைக் கற்றவர்.

சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். கல்வியால் ஒரு மனிதன் எப்படி மேம்பாடு அடைய முடியும் என்பதையும் தாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

தான் மீண்டும் தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கு வாழும் பி40 எனும் 40 விழுக்காட்டு அடித்தள இந்திய ஏழை மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் ஏற்றம் காணவும் பாடுபடப் போவதாக மக்கள் ஓசைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் உறுதியளித்தார்.

நாட்டில் உற்று கவனிக்கப்படும் பரபரப்பான தொகுதிகளுள் ஒன்றாகத் திகழும் கூட்டரசுப் பிரதேசத்தின் தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜொஹாரி அப்துல் கனி.

ஒரு கணக்கியல் நிபுணரான (அக்கவுண்டன்) அவர் தித்திவங்சா தொகுதியை உள்ளடக்கிய கம்போங் பாண்டான் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே ஆரம்ப – இடைநிலைக்கல்வியைக் கற்றவர். சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். கல்வியால் ஒரு மனிதன் எப்படி மேம்பாடு அடைய முடியும் என்பதையும் தாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

தான் மீண்டும் தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கு வாழும் பி40 எனும் 40 விழுக்காட்டு அடித்தள இந்திய ஏழை மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் ஏற்றம் காணவும் பாடுபடப் போவதாக மக்கள் ஓசைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் உறுதியளித்தார்.

அதேவேளையில் ஏழ்மையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண கல்வி ஒன்றுதான் உத்தரவாதமுள்ள சிறந்த வழி எனக் கூறிய அவர், தித்திவங்சா தொகுதியிலுள்ள இந்திய மக்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்க – அதன்வழி அவர்களின் குடும்பங்கள் மேலும் வளம் பெற – பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.

2015 புள்ளி விவரங்களின்படி பி40 பிரிவினரில் 91 விழுக்காட்டினர் எஸ்பிஎம் அல்லது அதற்கும் குறைவான கல்வித் தகுதிச் சான்றிதழ்களைக் கொண்டிருந்தனர். எனவே அவர்களுக்குக் கூடுதல் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் அவர்களின் எதிர்காலமும் பிரகாசம் ஆகும் என ஜொஹாரி தெரிவித்தார்.

கல்வியால் முன்னேறிய ஜொஹாரி

கல்வியால் சாதாரண நிலையில் இருந்து ஒருவன் வெளிவர முடியும் – முன்னேற முடியும் என்பதற்குத் தானே ஓர் உதாரணம் என்கிறார் 58 வயதான ஜொஹாரி. அவர் கம்போங் பாண்டானில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியை முடித்து பின்னர் கணக்கியல் துறையில் பட்டம் பெற்றார். தற்போது அரசியலிலும் வணிகத் துறையிலும் அவர் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

தன் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததாலேயே தன்னாலும் முன்னேற முடிந்ததாகக் கூறுகிறார் ஜொஹாரி. நம் நாட்டுக்குத் தேவை திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடைமுறையும் அரசியல் நிலைத்தன்மையும் என்கிறார் ஜொஹாரி. அதன் மூலமே நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும். மாறாக, மக்கள் விரும்பக் கூடிய, பிரபலமான திட்டங்களை குறுகிய கால பயன்கள் அடிப்படையில் செயல்படுத்திவிட்டு பின்னர் நீண்ட காலத்திற்கு பாதிப்புகளைக் கொண்டு வரும் நடைமுறையை நாம் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார் ஜொஹாரி.

நாட்டிற்கு நீண்ட கால அடிப்படையில் பயன்களைக் கொண்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்களே தேவை என்றும் குறுகிய காலத்தில் மக்களிடையே பிரபலமாவதற் காகவும் அவர்களைத் திருப்திப்படுத்து வதற்காகவும் திட்டங்கள் கொண்டுவரப் படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஜொஹாரி தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவை திறமையான தலைவர்களும்
அரசியல் நிலைத்தன்மையும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது வெளிநாட்டு முதலீடுகளின் மூலமே சாத்தியமாகும். எனவே மலேசியா நம்பகத்தன்மையும் திறமையும் வாய்ந்த வலிமையான தலைவர்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் அரசியல் நிலைத்தன்மையை நாம் கொண்டு வர வேண்டும் எனவும் ஜொஹாரி வலியுறுத்துகிறார்.

2013 பொதுத்தேர்தலில் இதே தித்திவங்சா தொகுதியில் அவர் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2018 பொதுத்தேர்தலில் அவர் தித்திவங்சா தொகுதியில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட முன்வந்திருப்பதால் தொகுதி மக்கள் தான் மீண்டும் இங்கு சேவையாற்ற வாய்ப்பளிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

தித்திவங்சா தொகுதியிலுள்ள இந்திய வாக்காளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பெருமளவில் ஆதரவு தந்துகொண்டிருப்பதற்கு ஜொஹாரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தித்திவாங்சா தொகுதியை மீண்டும் கைப்பற்றினால் வாக்குறுதியளித்தபடி இங்குள்ள மக்களின் – குறிப்பாக இந்திய சமுதாயத்தின் – ஏழ்மைப் பிரச்சினைகளைக் களையவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கண்டிப்பாகப் பாடுபடுவேன் என உறுதி கூறினார் ஜொஹாரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here