கோலாலம்பூர்:
கடந்த மாதம் தெலுக் இந்தானில் 9 FRU பணியாளர்கள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய, மரண விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கடந்த் மாதம் 15-ஆம் தேதி சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது.
அத்தோடு விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதையும் அந்தோனி லோக் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் சிறப்பு பணிக்குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று, அந்தோனி லோக் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
முன்னதாக, மே 13-அம் தேதி தெலுக் இந்தான் சித்திரை பௌர்ணமி விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு, வீடுதிரும்பும் போது 9 சேமப்படை உறுப்பினர்கள் பயணித்த வாகனம் ஜாலான் சிகஸ்-சுங்கை லாம்பாமில் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது நினைவுகூறத்தக்கது.





















