பால்வெட்டுத் தொழிலாளியின் மகன் நாட்டின் 9ஆவது பிரதமர் -மலேசியக் குடும்ப உணர்வுக்கு உயிர் தந்தவர்

பகாங், பெரா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கம்போங் புக்கிட் திங்காட்டில் ஒரு பால்வெட்டுத் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்து அங்கேயே வளர்ந்து நாட்டின் 9ஆவது பிரதமராகப் பதவியேற்று மலேசிய வரலாற்றுச் சுவட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைப் பதித்தவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

பிரதமர் ஆகும் எண்ணம் அறவே இல்லாத நிலையில் இறைவனின் நல்லாசியால் அப்பதவியில் அமர்ந்ததாகக் கூறும் இஸ்மாயில் சப்ரி, 2021 ஆகஸ்டு 21ஆம் தேதி மலேசியாவின் 9ஆவது பிரதமராக மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முன்னிலையில் இஸ்தானா நெகராவில் பதவியேற்றுக் கொண்டார்.

அவரின் பிரதமர் நியமனம் நாட்டிற்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது. அரசியல் மேலும் கோவிட்-19 தொற்றுப் பரவல் போன்றவற்றால் நிலைகுலைந்து போயிருந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தது.

தங்களுக்கு முன்னுரிமை தரும் ஒரு தலைவர்தான் தங்களுக்கு வேண்டும் என்ற மக்களின் விருப்பம் நிறைவேறிய நாள் அது. கோவிட்-19 கொடுந்தொற்றுப் பரவலால் ஏற்பட்ட இழப்புகளைத் தாங்கிக்கொள முடியாதபட்ங்த்தில் அல்லாடிக் கொண்டிருந்த மக்களுக்கு அரசியல் நெருக்கடிகளும் மிகப்பெரிய மன உளைச்சலைத் தந்தது.

ஆனால் சரியான நேரத்தில் இஸ்மாயில் சப்ரி நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கினர்.

மலேசியக் குடும்பம்; மக்களுக்கு முன்னுரிமை

தாம் பதவியேற்ற நாளில் இருந்து மலேசியர்களை இனம், மதம், சமயம் கடந்து மலேசியக் குடும்பம் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாட்டையும் மக்களையும் காக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் முன்னுரிமை தந்தார்.

மலேசியர்களின் ஒற்றுமையால் மட்டுமே நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த கோவிட்-19 தொற்றுப் பரவலையும் அரசியல் நெருக்கடிகளையும் தணித்து ஒரு வளமான மலேசியாவை உருவாக்குவதற்கு அல்லும்பகலும் பாடுபட்டார்.

அரசியல் நிலைத்தன்மைக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தம்முடைய இந்த முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையில் அரசியல் நிலைத்தன்மைக்கு என்ன வழி என்பதற்கு விடை காணும் வகையில் 2021 செப்டம்பர் 13ஆம் தேதி இன்னொரு வரலாற்றையும் அவர் பதிவு செய்தார்.

இந்த நாளில் பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையொப்பமிட்டார். இதன்வழி நாட்டில் அரசியல் நிலைத்தன்மைக்கும் அரசியல் உருமாற்றத்திற்கும் வித்திடப்பட்டது.

அன்றைய சவால்மிக்க நெருக்கடிகளுக்கு சரியான சிந்தனையில் அவர் இந்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தார். அரசியல் நெருக்கடி காலகட்டத்தில் நாடு மேலும் மக்களின் சுபிட்சத்திற்கும் வாழ்வாதார நலன்களுக்கும் முன்னுரிமை தருவதற்கு அரசியல் சார்பமற்ற அணுகுமுறைதான் சிறந்த வழி என்பதால் எதிர்க்கட்சிகளுடன் இஸ்மாயில் சப்ரி கரங்கோத்தார்.

 

தங்களுக்கு இடையிலான அரசியல் நோக்கங்களையும் போராட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு கோவிட்-19 நெருக்கடியைச் சமாளித்து மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே அணியில் திரள வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவுக்கு ஏற்ப பிரதமரின் அன்றைய அந்தச் சீரிய சிந்தனை மிகப்பெரிய பலன்களைத் தந்தது. நாடும் மக்களும் கோவிட்-19 கொடுந்தொற்றுப் பிடியில் இருந்து மெல்ல விடுபடத் தொடங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.

கோவிட்-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் வழி மலேசியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வழி அமைத்துத் தந்தவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

மலேசியாவின் இந்தத் தடுப்பூசி திட்டமானது உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுள் மிகச்சிறந்த ஒன்றாகப் பதிவாகி இருக்கிறது.

இளையோருக்கு முன்னுரிமை

சமுதாயத்தில் இளையோர் மிக முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்களையும் இஸ்மாயில் சப்ரி அமல்படுத்தத் தொடங்கினார்.
இளையோரின் பங்களிப்பு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவித்து அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி ஆகியவற்றில் இளைஞர்களின் நிறைவான பங்கேற்பை அவர் உறுதி செய்தார். அதற்குரிய வங்திகளையும் வாய்ப்புகளையும் அவர் ஏற்படுத்தித் தந்தார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளப்பத்திற்கும் இளைய சமுதாயம் முதுகெலும்பு என்பதை அவர் உரக்கச் சொன்னார். இளையோரின் திறமைகளையும் ஆற்றலையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்ததோடு அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை தந்தார்.

 

கால உருமாற்றத்திற்கு ஏற்ப இளையோரின் முன்னேற்றம்தான் இந்த நாட்டின் முன்னேற்றம் என்பதை இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து வலியுறுத்தினார்.

உயர்கல்வி மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில் அவர் அதீத அக்கறை கொண்டார். இளையோரின் மேம்பாடே நாட்டின் விருப்பம் என்பது மீது நம்பிக்கை கொண்டு அதற்கேற்றவாறு கொள்கைகளையும் உருவாக்கி நாட்டின் எதிர்காலமே அவர்கள்தாம் என்ற கொள்கைப் பிடிப்போடு நாடாளுமன்ற மேலவையில் இளம் செனட்டர்களை நியமனம் செய்தார்.

இபிஎப் சேமிப்பில் இருந்து 10 ஆயிரம் ரிங்கிட் எடுக்க அனுமதி

கோவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் பல்வேறு இழப்புகளால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு ஙெ்யல்பட்ட டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உடனடித் தேவைகளுக்காக இபிஎப் சேமிப்பில் இருந்து ஒரே நேரத்தில் 10 ஆயிரம் ரிங்கிட் எடுப்பதற்கு அனுமதித்தார்.

மக்கள் மீது எந்த அளவுக்குப் பரிவும் பாசமும் கொண்டிருந்தார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது. அதே சமயம் மலேசியக் குடும்ப (பிகேஎம்) உதவித் திட்டத்தின் கீழ் கூடுதல் ரொக்க உதவியையும் அவர் அறிவித்தார்.

1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம்

2022 மே 1ஆம் தேதி தொடக்கம் மத்திய அரசாங்கம் தொழிலாளர்களுக்கு 1,500 ரிங்கிட்டை குறைந்தபட்ச மாதாந்திரச் சம்பளமாக அமல்படுத்தியது.

சாதாரண தொழில்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குத் தீர்வாக அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அமைந்தது.

2022 ஏப்ரல் 1ஆம் தேதி எஸ்ஓபி எனும் நிரந்தர செயல் நடவடிக்கைகள் கீழ் விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளும் தளர்த்தப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் மீண்டும் செயல்படுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பொருளாதார மீட்சிக்கு வித்திட்டார்.

மலேசியக் குடும்பக் கோட்பாட்டின் கீழ் நாடும் மக்களும் சீபிட்சம் பெறுவதற்கு விழுந்து கிடந்த பொருளாதாரம் மீண்டும் நிமிரக்கூடிய திட்டங்களை அவர் அமல்படுத்தினார்.

வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதற்குரிய திட்டங்களையும் அனுமதிகளையும் வழங்கினார்.

உலக நாடுகளுடனான அரச தந்திர உறவுகளுக்கு வலுசேர்த்தார்

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உலக நாடுகளுடனான அரசு தந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்குரிய திட்டங்களையும் அவர் முன்னெடுத்தார்.

இந்தோனேசியாவுக்கு 2021 நவம்பர் 9ஆம் தேதி, 2022 ஏப்ரல் 1 முதல் 2ஆம் தேதி வரை வருகை மேற்கொண்டு இந்தோனேசியப் பணிப்பெண்களை வருவிப்பு – பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதைப் பார்வையிட்டார்.

2021 நவம்பர் 29ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டு மலேசியா – சிங்கப்பூர் இடையிலான தரை, ஆகாயம், கடல் எல்லை வழியில் விடிஎல் எனப்படும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணிப்பதற்கான அனுமதியை அமல்படுத்தும் திட்டத்தைப் பேசி முடித்தார்.

அதே சமயம் மலேசியா – சிங்கப்பூர் இடையிலான இருவழி உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுத் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார். புரூணை, கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் வருகை மேற்கொண்டு இருவழி உறவுகள், பரஸ்பர வணிக உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்தும் பேச்சு நடத்தினார்.

தொடர்ந்து வியட்நாம், கட்டார், ஐக்கிய அரபு சிற்றரசு, ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வருகை மேற்கொண்டார். மேலும் அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற ஆசியான் – அமெரிக்கா சிறப்பு உச்சநிலை மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சிறப்புப் பணிக்குழு

நாட்டில் படுமோங்மான நிலையை எட்டிக் கொண்டிருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதார நிலையைச் சீர்படுத்துவதற்கு சிறப்புப் பணிக் குழு ஒன்றையும் பிரதமர் அமைத்தார். பணவீக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் வாழ்வாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதன் அடிப்படையில் அதற்கு உடனடித் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார்.

பணவீக்கம் காரணமாக அடிப்படைத் தேவைக்கான அல்லது பயனீட்டுக்கான பொருட்களின் விலை படுமோசமாக அதிகரித்ததைச் சமாளிப்பதற்கு இந்தப் பணிக் குழுவுக்கு அவர் உத்தரவிட்டார்.

சமையல் எண்ணெய், கோழி, முட்டை ஆகியவற்றுக்கு அரசு மானிய உதவித்தொகையையும் வழங்குவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். இவை யாவும் சாமானிய மக்களின் அன்றாடத் தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை பரிவோடு அவர் முன்னெடுத்தார்.

கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்திற்கு முன்னுரிமை

14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதால் மக்களால் தேர்வு ஙெ்ய்யப்பட்ட அரசாங்கம் கவிழ்ந்தது. இதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் 4 ஆண்டுகளில் மூன்று பிரதமர்களையும் மூன்று அரசாங்கங்களையும் மக்கள் கண்டனர்.

இது அரசியல் நிலைத்தன்மை இன்மைக்கு வித்திட்டு நாட்டின் வளத்தையும் மக்களின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதித்தது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்த இஸ்மாயில் சப்ரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுப்பதற்கு கட்சித் தாவல் மசோதா சமர்ப்பிக்கப்படுவதற்கு முழு ஆதரவு வழங்கினார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு நல்கி சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கும் அவர் இறுதி வரை துணை புரிந்தார்.

பெண்களுக்கு உயரிய மரியாதை

நாட்டில் பெண்களுக்கு உயரிய இடத்தை வழங்கி கௌரவித்தார் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப். வேலை, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றில் பெண்களுக்கு உயரிய பதவிகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here