15வது பொதுத் தேர்தல் தொடர்பான குற்றங்களுக்காக பினாங்கில் இதுவரை மூவர் கைது

ஜார்ஜ் டவுன், நவம்பர் 15 :

பினாங்கில் 15வது பொதுத் தேர்தல் பிரச்சார காலத்தில் (GE15) செய்ததாக நம்பப்படும் பல்வேறு குற்றங்களுக்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 30 புகார்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அம்மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 385 இன் கீழ் மிரட்டி பணம் பறித்ததற்காகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் 324 இன் கீழ் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

“GE15 பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட 10 நாட்களில், 986 பிரச்சார கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும் இதுவரை 360 பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், இன்று பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர்,
செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here