சக தோழர்களை அடித்த பள்ளி மாணவர்கள் கைது

பள்ளி தோழர்கள் இரண்டு பேரை அடித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில்  நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  தன்னையும்  தனது  தோழனையும் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்  குழு    தாக்கியதாக 16 வயது மாணவன் நேற்று காவல்துறைக்கு  அளித்த புகாரைத் தொடர்ந்து   மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகக்  காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் zaid  கூறினார்.

சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இன்று பர் பந்தார் பாரு பாங்கி நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்படுவர். விசாரணைக்காக இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல நபர்களை போலீசார் இன்னும் கண்காணித்து வருகின்றனர்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இடைவேளையின் போது பள்ளியின் உணவகத்தில் உணவு மற்றும் பானங்களுக்கான கட்டணம் குறித்து புகார் செய்தபோது ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக சண்டை ஏற்பட்டதாக zaid கூறினார்.  சந்தேகநபர்களில் ஒருவர் புகார் செய்தவரை பழிவாங்குமாறு தனது நண்பர்களிடம் கூறியதை அடுத்து நிலைமை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று பள்ளி அருகே மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் இரண்டு வீடியோக்கள் வைரலானது.  புகார் அளித்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் என  இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 147 ஆவது பிரிவின் கீழ் கலவரத்திற்காக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here