பலூன் அலங்கார சேவைகளை வழங்குவதாக ஏமாற்றிய பெண் கைது

ஷா ஆலம்: தனது இன்ஸ்டாகிராம் பக்கமான thepartyfairy.my மூலம் பிறந்தநாள் விழாக்களுக்கு பலூன் அலங்கார சேவைகளை வழங்குவதில் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 700 ரிங்கிட் இழந்ததாக பாதிக்கப்பட்ட ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள கெரிஞ்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் அதிகாலை 4.30 மணியளவில் பெண், வழங்கப்படாத சேவைகளுக்காக சந்தேகிக்கப்பட்டு 30 வயதான மாது அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட போது ​​பல கணினிகள், ஒரு ஐபேட், பல ஜோடி பிராண்டட் ஷூக்கள், கைப்பைகள் மற்றும் கண்ணாடிகள், அத்துடன் ROS மற்றும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் அடங்கிய ஒரு உறையையும் போலீசார் கைப்பற்றினர்.

முகமட் இக்பால் கூறுகையில், சந்தேக நபர் ஜூலை மாதம் முதல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேவைகளை வழங்கி வருவதாகவும், தனது வாடிக்கையாளர்களிடம் கோரப்பட்ட அலங்காரத்தின் வகையைப் பொறுத்து குறைந்தபட்சம் RM500 வசூலிக்கிறார் என்றும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள ஆறு வழக்குகளில் அந்தப் பெண் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 420 இன் கீழ் மேலும் விசாரணைக்கு வசதியாக அந்தப் பெண் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here