சரஸ்வதி, ஃபுசியா சாலே ஆகியோர் செனட்டர்களாக பதவியேற்றனர்

பிகேஆர் உதவித்தலைவர் கே.சரஸ்வதி மற்றும் பிகேஆர்  முன்னாள் வனிதா தலைவி ஃபுசியா சாலே ஆகியோர் சனிக்கிழமை (டிசம்பர் 10) முதல் ஒரு முறை செனட்டர்களாக பதவியேற்றனர்.

மக்களவை தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ரைஸ் யாதிம் முன்னிலையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் காலை 9.04 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தபடி 27 துணை அமைச்சர்களில் சரஸ்வதி மற்றும் ஃபுசியா ஆகியோர் அடங்குவர். மேலும் அவர்கள் முறையே தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராகவும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கத்தின் நிர்வாகத்தின் போது ஃபுசியா இதற்கு முன்னர் பிரதமர் துறையில் (சமய விவகாரங்கள்) துணை அமைச்சராக பதவி வகித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலில் சரஸ்வதி தாப்பாவில் தோற்றார். அதே சமயம் ஃபுசியா குவாந்தனில் தோற்கடிக்கப்பட்டார்.

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்ற 27 துணை அமைச்சர்களை நியமிப்பதாக அன்வார் நேற்று அறிவித்தார். அவர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு இஸ்தானா நெகாராவில் பதவியேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here