ஒரு உணவக ஊழியர் தன்னை “அபாங்” அல்லது “பேபி” என்று அழைக்க மறுத்ததால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக, அவருக்கு ஷா ஆலாம் மாவட்ட நீதிமன்றம் இன்று RM300 அபராதம் விதித்தது.
தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றம் சாடடப்பட்ட முகமட் அஸ்ரி அப்துல்லா, 50, என்பவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறின், ஏழு நாட்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று மாவட்டநீதிமன்ற நீதிபதி முகமட் ரெட்ஸா அசார் ரெசாலி உத்தரவிட்டார்.
வீடற்ற குறித்த ஆடவர், கடந்த ஜூன் 4 ஆம் தேதி காலை 9 மணியளவில், புத்ரா ஹைட், சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றவியல் சட்டம் பிரிவு 268 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், உணவக ஊழியர் தன்னை அவரை ‘மாமா’ என்று அழைக்க வேண்டாம் என்றும், “அபாங்” அல்லது “பேபி” என்று அழைக்க மறுத்ததால், முகமட் அஸ்ரி கோபமடைந்து, வெறித்தனமாகச் சென்று, “நாசி லெமாக்” மற்றும் சூடான நெஸ்கோப்பி பானத்தை உணவக உரிமையாளரின் நான்கு வயது மகன் மீது வீசினார்.
முன்னாள் லோரி ஓட்டுநரான அவர், உணவகத்தில் மேசைகளை உதைத்து, நாற்காலிகளை வீசி, எச்சில் துப்பியும், புரியாத மொழியில் ஏதோ சொல்லியும், வினோதமாக நடந்துகொண்டும் வெறித்தனமாகச் சென்றார்.
முன்னதாக, ஒரு நபர் திடீரென வெறித்தனமாக நடந்துகொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.








