காதல் முறிந்ததால் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை

துனிஷா சர்மா

இந்தி சினிமா துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் துனிஷா சர்மா. மராட்டியத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். பின்னர், இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பிரபலமாகியுள்ளார். தற்போது, அலிபாபா தாஸ்தென் – இ – காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனிடையே, துனிஷா சர்மா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். படப்பிடிப்பு தளத்தில் துனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அலிபாபா தாஸ்தென் – இ – காபுல் வெப் தொடரில் கதாநாயகனாக நடித்தி வரும் ஷஷென் முகமது கான் மேக்கப் அறைக்கு துனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷஷென் முகமது கானை கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட துனிஷா சர்மாவும், அவருடன் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் முகமது கானும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் துனிஷா சர்மாவும் – முகமது கானும் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர். காதல் முறிவால் துனிஷா சர்மா மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார்.

காதல் முறிவால் மன வருத்தத்தில் இருந்த துனிஷா படப்பிடிப்பு தலத்தில் நடிகர் முகமது கானின் மேக் அப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து, நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் ஷஷென் முகமது கானை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து நடிகர் ஷஷென் முகமது கான் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை துனிஷாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here