30 ஆண்டு கால நெடுநாள் சேவையாளர்களை அடையாளங் கண்டு சிறப்பிக்கிறது இண்டா வாட்டர் நிறுவனம்

*ராமேஸ்வரி ராஜா
*படங்கள் : பி.மலையாண்டி

கோலாலம்பூர்:

தேசிய திடக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனமான இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியத்தின் சேவை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு “3 தசாப்தங்களாக மக்களின் நலனை உறுதிப்படுத்துவதில் IWK30” என்ற கருப்பொருளின் அடிப்படையில் பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது இண்டா வாட்டர் கன்சோர்ட்டியம்.

அர்ப்பணிப்பு, கடப்பாட்டு உணர்வுகளோடு சிரத்தையோடு சேவையாற்றி நிறுவனம் இன்று இந்த அடைவுநிலையை எட்டிப் பிடிப்பதற்கு உறுதுணையாக நின்ற சேவையாளர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த IWK நீண்டகால சேவையாளர் விருது வழங்கப்படுகிறது. பணியாளர்களின் விசுவாசத்தையும் வேலை தார்ப்பரியத்தை உணர்ந்து கொள்கையோடும் நீண்ட காலப் பிணைப்போடு அற்புதமாகச் சேவையாற்றிய பணியாளர்களைப் போற்றும் வகையில் இந்த விருதளிப்பு நிகழ்ச்சி அமைகிறது.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தமது சேவையை தொடங்கிய நாள் முதல் மலேசியர் யாவருக்கும் நவீனமயமான மிகச் சிறந்த ஆக்கப்பூர்வமான கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை மேம்படுத்துவதிலும் நிர்வகிப்பதிலும் முன்னணி நிறுவனமாகப் பெயரெடுத்திருக்கிறது IWK. கடந்த 30 ஆண்டு காலமாக நாட்டின் ஆக்ககர வளர்ச்சிக்கு உறுதுணையாக பாதுகாப்பு வாய்ந்த சுகாதாரச் சூழ்நிலையை வழங்கி தனது சிறந்த சேவையை இந்நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.

கழிவுநீர் தேக்கத் திட்டத்தில், இந்த நிறுவனம் செயற்படும் அனைத்து பகுதிகளிலும் துரித முறையில், குறுகிய கால நீண்ட கால அடிப்படையிலான சேவைகளை இலக்காகக் கொண்டு மிக முக்கிய முகவராக இந்த நிறுவனம் செயற்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் மிகத் தரமான, சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட அனுபவத் திறன் மிக்க சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இந்த IWK மேற்கொள்கிறது.

தொடக்கக் கட்டமாக கடந்த 2012ஆம் ஆண்டு முதல், IWRC எனப்படும் இண்டா வாட்டர் ஆய்வு மையம் இதற்காக தோற்றம் கண்டது. வீணாகும் நீரைச் சுத்திகரிக்க ஆய்வு, மேம்பாட்டு முறை நிர்வாக முறையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் ஆய்வு திட்டங்களின் ஒத்துழைப்போடு, நீர் சுத்திகரிப்பு தரத்தை உயர்த்த ஆக்கப்பூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த 30ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் பந்தாய் டாலாம் IWK எக்கோ பார்க்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இன்று தமது பணியாளர்கள், பங்குதாரர்கள், சமுதாய உறுப்பினர்களை இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்க அன்போடு வரவேற்றது IWK.

இரவு கொண்டாட்ட விழாவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த வருகையாளர்கள், கண்ணுக்கினிய பூங்கா பின்னணியோடு கூடிய அழகிய சுற்றுச்சூழலில், வீதியோரக் கலைஞர்களின் மெல்லிசையோடு IWK வின் இதுநாள் வரையிலான சேவைப் பற்றிய முழு விவரக் குறிப்புகளையும் கண்டு களிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.


அந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய துணைப் பிரதமரும் எரிசக்தி குடிநீர் உருமாற்ற துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப், மத்திய அரசாங்கத்தின் சார்பாக இந்த 30ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தேசிய வடிகால் முறை தொழிற்துறையில் இந்த அடைவுநிலை மிகப் பெரிய மைல் கல்லாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் சுற்றுச் சூழல் பராமரிப்பிலும் புத்தாக்க முறையிலான தேசிய பொருளாதார சுழற்சியை IWK கழிவு நீர் அகற்றும் திட்டம் மிகப் பெரிய சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.

IWK தலைவர் ஹாஜி அமாட் ஜோனி பின் நவாவி பேசுகையில், இந்த 30 ஆண்டுகால பயணத்தில் தாங்கள் அடைந்திருக்கும் அடைவுநிலை குறித்து தாங்கள் தாழ்மையோடு பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.

நீண்டகால சேவையாளர் விருது பெற்றவர்களில் சக்திவேல் மாணிக்கம், சந்திர குமார் வேலுசாமி, மலையரசன் முத்துசாமி ஆகியோரோடு மேலும் இரு இந்தியர்கள் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here