பத்தாங் காலி நிலச்சரிவு குறித்த போலீஸ் விசாரணை 90% முடிந்தது

பத்தாங் காலிக்கு அருகிலுள்ள  ஆர்கானிக் பண்ணை முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் குறித்த காவல்துறை விசாரணைகள் தற்போது கிட்டத்தட்ட 90% நிறைவடைந்துள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் Arjunaidi Mohamed தெரிவித்தார்.

தற்போதைய விசாரணைகளில் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தல், மீட்புக் குழுவினர் இடையேயான உரையாடல்களின் பதிவுகள் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மருத்துவமனை நோயியல் அறிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று Arjunaidi  கூறினார்.  இதுவரை  பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பங்கள், முகாம் நடத்துபவர்கள்,  தொழிலாளர்கள் மற்றும் மீட்புக் குழு பணியாளர்கள் உட்பட 77 சாட்சிகளிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 304 (A) மற்றும் 290 மற்றும் உள்ளூர் அரசாங்கச் சட்டம் 1974 ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையில், சம்பவத்தில் புதைந்த  20 வாகனங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும், உரிமையாளர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Arjunaidi  கூறினார்.

வாகனங்கள் மிகவும் ஆழமாக புதைந்திருப்பதால் போலீசார் வாகனத்தை அகற்ற மாட்டார்கள். சேதம் மற்றும் அவர்களின் உரிமைகோரல்கள் குறித்து அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசுவது உரிமையாளர்களின் கையில் உள்ளது என்று அவர் கூறினார்.  டிசம்பர் 16 அன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 92 பேரில் 31 பேர் உயிரிழந்தனர். 61 பேர் காயமின்றி அல்லது சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here