கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

கோம்பாக்: ஜாலான் பெஸ்தாரி ஜெயா-ரவாங்கில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) காலை 11.40 மணியளவில் இந்த கண்டுபிடிப்பு குறித்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதாக கோம்பாக் OCPD உதவி ஆணையர் ஜைனல்  முகமது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் நாற்பது வயதுடையவர். அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பரிசோதனைகளில் பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் மெரூன் நிற டி-ஷர்ட் அணிந்திருந்தார், அதில் “நம்பிக்கை” என்ற வாசகம் இருந்தது. இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here