சாலையின் கீழ் உள்ள கால்வாய் இடிந்து விழுந்ததை தொடர்ந்து கோத்தா கினாபாலு-சண்டகான் சாலை மூடப்பட்டது

கோத்தா கினாபாலு:

தொடர்ச்சியான கனமழை காரணமாக, சாலையின் கீழ் குறுக்காக செல்லும் கால்வாய் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, கோத்தா கினாபாலு-சண்டகான் சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக சபா பணித்துறை (JKR) தெரிவித்துள்ளது.

கோத்தா கினாபாலு-சண்டகான் சாலையின் KM 109.378இல் கீழ் உள்ள கால்வாய் இடிந்திருப்பது ஓட்டுநர்களுக்கு ஆபத்தானது என்றும் அவ்வழியில் எந்த வகை வாகனமும் செல்ல முடியாது என்று நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சாலைப் பயனர்கள் ஜாலான் சினாருட் பாரு தோகுடோன் பாரு வழியான மாற்றுப் பாதையில் செல்லலாம், ஆனாழும் அவ்வழியில் சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு அசம்பாவிதத்தையும் தவிர்க்க அனைத்து சாலைப் பயணிகளும் அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு அறிகுறிகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அது கூறியது.

கோத்தா கினாபாலு-சண்டகான் சாலை மாநிலத்தின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளை இணைக்கும் முக்கிய சாலைகளில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here