புதுடில்லி: ஏர்இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஏர்இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ.26 ம் தேதி புறப்பட்டது. அப்போது, சங்கர் மிஸ்ரா என்ற பயணி குடி போதையில், சக பயணியான 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். சங்கர் மிஸ்ரா நான்கு மாதங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்திய மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதும், தெரியவந்தது. இதையடுத்து பைலட்டின் லைசென்ஸை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.