சம்பளம் வழங்காததால் நூதன முறையில் முதலாளியின் உணவு விடுதியை மூட வைத்த தொழிலாளி

இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த உணவு விடுதியின் உரிமையாளருக்கும் சமையற்கலை நிபுணர் வில்லியம்ஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதாவது விடுமுறைக்குரிய சம்பளத்தை முதலாளி தனக்கு முறையாக வழங்கவில்லை என்று அந்த உணவு விடுதியின் வேலையை வில்லியம்ஸ் ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அந்த உணவு விடுதி உரிமையாளரை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த உணவு விடுதியின் கிச்சனுக்குள் 20 கரப்பான் பூச்சிகளை வில்லியம்ஸ் விட்டுள்ளார்.

இது சிசிடிவி கேமராவுக்குள் பாதிவானது. வில்லியம்ஸ் இதுபோன்று செய்வேன் என்று உரிமையாளரிடம் எச்சரிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த கரப்பான் பூச்சிகள் சாதாரணமானவை அல்ல. பாம்புகளுக்கு உணவாக போடப்படும் கரப்பான் பூச்சிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.  சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததை கண்டறிந்த பின்பு, வில்லியம்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சி உணவு விடுதியின் கிச்சனுக்குள் இருந்த காரணமாக அந்த உணவு விடுதி தற்போது மூடப்பட்டுள்ளது. உணவு விடுதியின் சுத்தம் மற்றும் சுகாதார காரணங்களுக்காக இந்த உணவு விடுதி மூடப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here