வாழைப்பழம் நிரப்பப்பட்ட சாக்கு பைகளுக்குள் வைத்து சிகரெட்டு கடத்தல் முயற்சி; மலேசிய கடல்சார் அமலாக்க துறையால் முறியடிப்பு

வாழைப்பழம் நிரப்பப்பட்ட சாக்கு பைகளுக்குள் வைத்து அண்டை நாட்டிலிருந்து தாவாவுக்கு சிகரெட்டுகளை கடத்தும் முயற்சியை, மலேசிய கடல்சார் அமலாக்க துறை முறியடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (பிப். 3) காலை 6 மணியளவில், தாவாவ் CIQ படகுத்துறையில் இருந்து தெற்கே 0.5 கடல் மைல் தொலைவில் RM18,000 மதிப்புள்ள சிகரெட் ரோல்களுடன், பூலாவ் செபாடிக்கில் இருந்து ஜெட்டி நோக்கி வந்து கொண்டிருந்த படகில், 33 வயதான உள்ளூர் கேப்டன் ஒருவரும், 48 வயதான இந்தோனேசிய பெண் பயணி ஒருவரும் இருந்ததாக தாவாவ் MMEA இயக்குநர் கடல்சார் கேப்டன், ஷாஹ்ரிசான் ராமான் கூறினார்.

“குறித்த படகுத்துறைக்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கடத்தபடுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.

“அப்போது ஜெட்டிக்கு அருகில் இருந்த படகை ஆய்வு செய்வதற்காக நிறுத்தியபோது, உள்ளூர் சந்தைக்காக கடத்தப்பட்டதாக நம்பப்படும் வாழைப்பழங்கள் நிரப்பப்பட்ட சாக்கு பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளை கடல்துறை அமலாக்க குழுவினர் கண்டுபிடித்தனர்.

“சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(d) இன் கீழ் மேலதிக விசாரணைக்காக கேப்டன் மற்றும் படகிலிருந்த பயணி மற்றும் படகு மற்றும் சிகரெட்டுகள் கடல்சார் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

“படகு மற்றும் இயந்திரம் உட்பட மொத்த பறிமுதல்களின் மதிப்பு 43,000 ஆகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here