பயன்படுத்திய உள்ளாடையை ஏலம் விட்ட பிரபல அழகி

பிரபல அமெரிக்க ராப்-பாடகி அலிசா மைக்கேல் ஸ்டீபன். அவருக்கு சொந்தமான, அவரால் பயன்படுத்தப்பட்ட இரண்டு உள்ளாடைகள் சமீபத்தில் ஆன் லைனில் ஏலம் விடப்பட்டது. 24 வயதான அந்த பாடகி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான உள்ளாடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகின. அதாவது, ஒரே உள்ளாடையை ஏன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என நெட்டிசன் அவரை கலாய்த்தனர்.

சிறுத்தை புள்ளிகள் கொண்ட அந்த உள்ளாடைகள் குறித்த இந்த பதிவுக்கு அந்த பாடகி பதிலளித்திருந்தார். அதில்,”ஐயோ, பேன்டி (உள்ளாட்டை) போலீசா” என நகைச்சுவையாகவும், அந்த டிரோலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அவர் பதிவிட்டார். மேலும், அதில் இருந்து ஒரு படி மேலே சென்று, இபே நிறுவனத்தில், தனது உள்ளாடைகளை விற்பனை செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த விற்பனைக்கான பதிவில்,லட்டோ (Latto) பயன்படுத்தப்பட்ட சிறுத்தை புள்ளிகள் கொண்ட உள்ளாடைகள். அதிக முறை பயன்படுத்தியதாக பார்க்கப்பட்ட உள்ளாடைகள்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இதனை விற்பதால் புது உள்ளாடைகள் வாங்க இது உதவும் எனவும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் தெளிவாக விளக்கியிருந்தார். தன்னிடம் சிறுத்தை புள்ளிகள் இருப்பது போன்ற உள்ளாடைகள் அதிகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், ஒரு ஐந்து உள்ளாடைகளை புகைப்படம் எடுத்து, ஸ்டோரியாக பதிவிட்டு,”இதில் ஒரு ஜோடி உள்ளாடைகளை இன்று பயன்படுத்தி, மறுநாள் விற்க திட்டமிட்டுள்ளேன்” என பதிவிட்டிருந்தார். அவர், இபே தளத்தில் ஒரு ஜோடி உள்ளாடைகளை விற்பனையில் பட்டியலிட்டார்.

தொடர்ந்து, அது பட்டியலிட்ட அரைமணி நேரத்தில், 90 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்கள் ( ரூ.75 லட்சம் ) மதிப்பில் ஏலம் கேட்கப்பட்டது.இதனை அடுத்து சில நிமிடங்களிலேயே இபே பட்டியிலிடப்பட்ட உள்ளாடையை நீக்கிவிட்டது. தன்னுடைய பழைய துணிகள் பாலிசி மூலம் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டது. பயன்படுத்திய உள்ளாடைகள், காலுறைகள் ஆகியவற்றை விறக் அனுமதி இல்லை.

அவை சுத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இபேயில் பிராக்கள் உள்ளாடையாக கருதப்படவில்லை. ஆரோக்கியமும், சுகாதாரமுமே முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here