3 நாட்களில் அந்நிய தொழிலாளர்களுக்கான அனுமதி கிடைப்பது வரலாற்று சரித்திரம்; பிரெஸ்மா

மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கம் (பிரெஸ்மா)  மனிதவளத்துறை அமைச்சர் வ.சிவகுமாருடன் சந்திப்பு கூட்டம் நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக  சங்கத்தின் தலைவர் டத்தோ டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் @ டத்தோ அலி மாஜி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பிரெஸ்மாவின் முன்னாள் தலைவர் டத்தோ ஜமருல் கான் உள்ளிட்ட நடப்பு செயலவை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் போது ஜவுளித்துறை, முடி திருத்துவோர் சங்கம், பொற்கொல்லர்கள் ( தங்க ஆபரணம் செய்பவர்கள்) ஆகியத் துறையை சார்ந்தவர்களும் அந்நிய தொழிலாளர்களை தருவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பிரெஸ்மாவின் தற்போதைய கோரிக்கை வெளிநாட்டுத் தொழிலாளர்களை உணவகக் கடைக்கு மேல் தங்க வைக்கப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது இது என்னுடைய துறையை சார்ந்தது அல்ல என்றும் ஆனால் அதற்கு தன்னால் எவ்வகையில் உதவ முடியும் என்பதனை ஆலோசிக்கிறேன் என்று மனிதவள அமைச்சர் கூறினார். மேலும் அந்நிய தொழிலாளர்களை தருவிக்கும் வயது வரம்பினை 45இல் இருந்து 55ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறோம்.

அதே போல் எங்களிடம் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையிடத்தில் இருந்து ஓடி விட்டால் அதனை நாங்கள் குடிநுழைவுத் துறைக்கு தெரிவிப்பது மட்டுமல்லாமல் 750 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும்.  அவ்வாறு அபராதம் செலுத்தினால் கூட எங்களுக்கு மாற்று தொழிலாளரை பணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மேலும் தங்களின் பணிகாலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் அந்நிய தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த புதிதாக மனு செய்ய வேண்டியுள்ளது. அதனை தவிர்த்து Checkout Memo  வழி மாற்று தொழிலாளியை வழங்க வேண்டும் என்பது குறித்தும், அரசாங்கம் 3 நாட்களில் அந்நிய தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்பது தற்பொழுது சாத்தியமாக  மனிதவளத்துறை வ.சிவகுமாரின் பங்கு அளப்பரியது.

நாட்டின் வரலாற்றிலேயே 3 நாட்களில் அனுமதி கிடைப்பது என்பது உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் வ.சிவகுமாருக்கும்  இவ்வேளையில்  நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here