மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை: இலங்கையில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு

அண்டை நாடான இலங்கை, இன்னும் பொருளாதார பிரச்சினையில் இருந்து மீளவில்லை. அந்த நாடு, மருந்துப்பொருட்களுக்காக 85 சதவீதமும், மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80 சதவீதமும் வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டால் கடந்த ஆண்டு முதலே அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

அதனாலும், பணவீக்கம் அதிகரிப்பாலும் நாட்டில் மருந்துப்பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மருந்துகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள், ஆய்வகங்களுக்கான வேதிப்பொருட்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் அடுத்த சில வாரங்களில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இந்த சூழலில், அரசு ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமல்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுவதாக சுகாதார மந்திரி கெகலிய ரம்புக்வெல்லா நேற்று அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தற்காலிமானதுதான் என்றும், அத்தியாவசியமான, அவசர அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here