15 மில்லியன் லஞ்ச வழக்குத் தொடர்பில் 3 நிறுவன இயக்குநர்கள் கைது

புத்ராஜெயா: பகாங்கில் ஒரு தளம் கட்டுவதற்கான திட்டத்தைப் பாதுகாக்க உதவுவதற்காக RM15 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) இரவு 8.30 மணிக்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அழைக்கப்பட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதல் சந்தேக நபர் இந்த திட்டத்திற்தை அறிமுகம் செய்த ஒரு நிறுவன இயக்குனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நிறுவன இயக்குநர்கள் பதவியில் உள்ள மற்ற இருவரும், முன்னாள் அமைச்சரிடம் பணம் கொடுப்பதாகக் கூறி லஞ்சம் கேட்டு பெற்றதாக நம்பப்படுகிறது என்று புதன்கிழமை (பிப் 15) ஒரு வட்டாரம் தெரிவித்தது.

சந்தேகநபர்கள் நீதிபதி இர்சா சுலைக்கா ரொஹானுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மூவரையும் பிப்ரவரி 17ஆம் தேதி வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்க அனுமதியளித்தார். எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி, கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here