இந்தாண்டு ஆகஸ்டு 31 வரை 1,410 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் மூடப்பட்டன: Nga

புத்ராஜெயா:

ள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகம் (KPKT) மற்றும் சலுகை நிறுவனங்களால் ஆகஸ்டு 31 வரை மொத்தம் 1,410 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

கழிவுகளை குறைக்க மலேசியர்கள் சரியான மீள்சுழற்சி பொருளாதார கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இதன்முலம் சட்டவிரோத குப்பை கொட்டும் தளங்கள் புதிதாகத் திறக்கப்படுவதை தடுக்கிறது என்று உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் Nga Kor Ming, தெரிவித்தார்.

“எனது 100 நாள் பணியில், இதுவரை நாங்கள் மொத்தம் 1,410 இடங்களை மூடிவிட்டோம். ஆனால் இன்னும் எத்தனை மூடப்பட வேண்டும்? என்பது தொடர்பில் தெடர்ந்து ஆராய்வதாக அவர் கூறினார்.

மலேசியா தற்போது கழிவு சுழற்சி விகிதத்தில் 33.17 சதவீதமாக உள்ளது, இது அனைத்துலக அளவுகோலான 70 சதவீதத்திற்கும் குறைவாகும் என்றார்.

எனவே திடக்கழிவு மேலாண்மையை நேரியல் பொருளாதாரத்திலிருந்து முழுமையான சுழற்சிப் பொருளாதாரத்திற்கு மாற்றுவதை விரைவுபடுத்துவதற்காக NCECயை நிறுவுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here