செராஸ் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் திடீர் சோதனை

செராஸ் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் புக்கிட் பிந்தாங்கைச் சுற்றியுள்ள உணவகங்கள், பப்கள், இரவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை உட்படுத்திய ஆறு இடங்களில் நேற்று கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) திடீர் சோதனை மேற்கொண்டது.

குறித்த வளாகங்கள் உரிமம் தொடர்பான நிபந்தனைகளை மீறியதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என்றும், அவற்றில் மூன்று உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பிரிவு 17, பொழுதுபோக்குச் சட்டம் 1992 இன் கீழ் அங்கு இருந்த உபகரணங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக, DBKL தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.

“ஏனைய மூன்று வளாகங்கள் அனுமதியின்றி பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நடத்துவதற்காக பொழுதுபோக்கு விதிகள் (WPKL) 1993 பிரிவு 4(1)(a) மற்றும் 4(1)(b) இன் கீழ் விசாரணை ஆவணங்களை திறந்ததாகவும் அந்த இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த அமலாக்க நடவடிக்கை தொடர்ச்சியாக கோலாலம்பூரின் கூட்டாட்சிப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் அவ்வப்போது நடக்கும் ” என்று DBKL கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here