வெள்ளத்திற்குப் பின் நீர் மூலம் பரவும் நோய்கள் தொடர்பில் சுகாதார அமைச்சகம் கண்காணிக்கிறது -டாக்டர் ஜாலிஹா

நாட்டில் தற்போது பல மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு பின் நீர் மூலம் பரவும் நோய்கள், குறிப்பாக லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் உணவு விஷமாதல் போன்றவை தொடர்பில், சுகாதார அமைச்சகம் கண்காணிப்பு நடத்தி வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட சுகாதார வசதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுவதற்காக நாங்கள் ஏனைய குழுக்களையும் அணிதிரட்டுவோம்” என்றும்,  வெள்ளப் பேரிடர்களுக்கு, குறிப்பாக தற்காலிக நிவாரண மையங்களில் சுகாதார வசதிகளை நிர்வகிப்பதில், சுகாதார அமைச்சு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கொண்டுள்ளது என்று டாக்டர் ஜாலிஹா கூறினார்.

இதற்கிடையில், தொற்று நோய்களைத் தடுப்பதற்கான ஃபோகிங் நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நடமாடும் கிளினிக்குகளை அமைத்தல் ஆகியவையும் இதில் அடங்கும் என்றார். உதாரணமாக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் COVID-19 பரிசோதனை சுகாதார பணியாளர்கள் நடத்தினர், என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here