வேலை வாங்கி தருகிறேன் என கூறி பாலியல் வன்கொடுமை; பிரபல காமெடி நடிகர் மீது பெண் புகார்

ராஜஸ்தானின் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்தவர் கயாலி சஹாரன். தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும், பிரபல காமெடி நடிகராகவும் உள்ளார். இதுதவிர இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், அவர் மீது ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்ப்பூர் நகரின் மானசரோவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில், நடிகர் சஹாரன் ஓட்டல் ஒன்றுக்கு வரும்படியும், திரை துறையில் வேலை வாங்கி தருவது பற்றி பேச வேண்டும் என்றும் என்னிடம் கேட்டு கொண்டார். இதன்படி, ஓட்டல அறைக்கு சென்றபோது, அவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, என்னை கடுமையாக மிரட்டினார். பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் அவர் தப்பியோடி விட்டார் என புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரை பெற்று கொண்டு, உறுதிப்படுத்திய போலீசார் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன் நடிகர் சஹாரன் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து உள்ளார் என கூறப்படுகிறது. அந்த பெண் புகாரில், திரை துறையில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி தனது தோழியிடமும் சஹாரன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

தொடக்க காலத்தில் கரும்பு ஆலை ஒன்றில் பாதுகாவலர் பணியில் இருந்த சஹாரன், வாழ்க்கையில் போராடி உள்ளார். நடைபாதையில் எல்லாம் படுத்து உறங்கி உள்ளார். அதன்பின்னர் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் வெற்றி பெற்றதும் அவர் திரை துறையில் நுழைந்து பிரபல நடிகரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here