இயக்குனராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் ‘சிகாடா’ பட முதல் பார்வையை வெளியட்ட விஷால். ஒரு புதிய பாணியிலான சர்வைவல் த்ரில்ல ரான ‘சிகாடா’வின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகர் விஷால்
நடிகர் விஷால் சிகாடா படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்.. மேலும் அதன் புதிரான கதைக்காகவும் கண்கவரும் முதல் பார்வைக்காகவும் மொத்த படக் குழுவி னரையும் பாராட்டினார்

நடிகர் விஷால் திரையுலகத்தினரிடம் நட்பாக பழகும் மனிதர் என்கிற விதமாக பாராட்டப்படுபவர். மேலும் படைப்பாளிகளின் திறமைகளை தொடர்ந்து அவர் ஆதரித்து ஊக்கப்படுத்தி வருவதை பல நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம். பன்முகம் கொண்ட கலைஞரான அவர் தற்போது ‘சிகாடா’வின் முதல் பார்வையை வெளியிட் டுள்ள துடன் படக்குழுவினரிடம் படம் குறித்து கலந்துரையாடவும் செய்திருக்கிறார். புதிதான விறுவிறுப்பான கதைக்கருவிற்காகவும் முதல் பார்வையின் தீவிர முக்கியத் துவத்திற்காகவும் அவர்களை பாராட்டவும் செய்தார். வெளியீட்டு நிகழ்வின்போது மொத்த படக்குழுவினருக்கும் மிகப்பெரிய வெற்றிக்காக தனது வாழ்த்துக்களை தெரி வித்துள்ளார்.

இருக்கை நுனியில் அமரவைக்கும் போராட்ட த்ரில்லரான ‘சிகாடா’ தமிழ், மலை யாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா பட மாக உருவாகியுள்ளது. தனக்கான சிறப்பான இடத்தை செதுக்கிக்கொண்ட இசை யமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் அடியெடுத்து வைக்கும் முதல் படம் இது.அதுமட்டுமல்ல முதன்முறையாக நான்கு மொழிகளுக்கும் புதிதான பாடல்க ளுடன் ‘சிகாடா’வை மேலும் மெருகேற்றும் விதமாக ஒரே டைட்டில், ஒரே கதை, 4 வெவ்வேறு மொழிகள், 24 வித்தியாசமான ட்யூன்களை உருவாக்கிய முதல் இசைய மைப் பாளராகவும் மாறியுள்ளார். .

வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இருவரும் தீர்னா பிலிம்ஸ் அன்ட் என்டர் டெய்ன்மென்ட் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர் இப்படத்தில் ரஜித் CR, ஜாய்ஸ் ஜோஸ், காயத்ரி மயூரா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடிக் கின்றனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் இப்படம் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது.





















