தென்கிழக்கு ஆப்பிரிக்காவை தாக்கிய புயல் – 500 பேர் பலி

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் பிரேடி புயல் உருவானது. பல நாட்களாக நீடித்து வரும் இந்த புயல் வரலாற்றில் அதிக காலம் நீடித்த புயலாக கருத்தப்படுகிறது. பிரேடி புயல் காரணமாக தென் கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிகியூ, மடகாஸ்கர், மலாவி ஆகிய நாடுகளில் கனமழையும், புயல் தாக்கிவருகிறது.

கனமழை புயல் காரணமாக இந்த நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு உள்பட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் மலாவி நாடு மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேடி புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 438 உயிரிழப்புகள் மலாவி நாட்டில் பதிவாகியுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். கனமழையுடன் புயல் நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதேவேளை, புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here