புக்கிட் பிந்தாங்கில் உள்ள 10 உடம்புப்பிடி நிலையங்களில் போலீசார் சோதனை; 84 பேர் கைது

கோலாலம்பூர்:

நேற்று (மார்ச் 8), 10 உடம்புப்பிடி நிலையங்களில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட தொடர் சோதனையில், 48 வெளிநாட்டு பெண்கள் உட்பட மொத்தம் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மசாஜ் செய்பவர்கள் (71 பேர்) என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 2 உள்ளூர்வாசிகள், 63 மியன்மார் நாட்டவர்கள் மற்றும் கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பங்களாதேஷ், சீனா மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

மேலும் குறித்த உடம்புப்பிடி நிலையங்களின் மேலாளர்கள் என நம்பப்படும் 6 உள்ளூர்வாசிகள், 2 கம்போடியர்கள் மற்றும் 2 மியன்மார் பிரஜைகள் அடங்கிய 10 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.

குறித்த சோதனையில் RM3,979 ரொக்கம், 9 சிசிடிவி ரெக்கார்டர்கள்,4 வைஃபை மோடம்கள், 3 ரவுட்டர்கள், 6 வணிக அட்டைகள் மற்றும் 14 பாட்டில்கள் மசாஜ் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அடங்கும்.

அத்தோடு அனைத்து மசாஜ் நிலையங்களும் செல்லுபடியாகும் அனுமதியின்றி வெளிநாட்டு ஆண்களையும் பெண்களையும் பணியமர்த்தியதாகவும், அவற்றில் 8 வளாகங்களுக்கு செல்லுபடியாகும் வணிக உரிமம் இல்லை என்றும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.

“கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்” என்றும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here