வெள்ளத்திற்குப் பின் ஜோகூரில் மூன்று சுகாதார கிளினிக்குகள் இன்னும் செயல்படவில்லை

இஸ்கந்தர் புத்ரி: ஜோகூரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று சுகாதார கிளினிக்குள் இன்னும் செயல்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என்று ஜோகூர் மாநில சட்டசபையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் கூறுகையில், அவற்றில் இரண்டு, அதாவது Tangkakஇல் இருக்கும் Kundung Ulu Rural Clinic மற்றும் Segamatஇல் இயங்கி வந்த  Chaah Health Clinic  இன்னும் செயல்பட பாதுகாப்பற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மற்றொரு சுகாதார மையமான  Sri Pandan Rural Clinic இன்னும் சுத்தம் செய்யும் பணியில் உள்ளது என்றார். கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் 41 சுகாதார கிளினிக்கின் செயல்பாட்டை பாதித்தது என்று லிங் கூறினார்.

வெள்ளத்தால் சேதமடைந்தவைகளுக்குப் பதிலாக மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உபகரணங்கள் மற்றும் வாகனங்களை பழுதுபார்ப்பதற்கும் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து மாநில சுகாதாரத் துறை (JKNJ) RM2,894,175 சிறப்பு ஒதுக்கீட்டைக் கோரியுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here