யான் மற்றும் போக்கோக் சேனாவை தாக்கிய கடும் புயல்; 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

புக்கிட் பெசாரில் உள்ள கம்போங் துவாலாங்கில் நேற்று மாலை 5.30 மணியளவில் வீசிய புயலால், குறைந்தது 25 வீடுகளின் கூரை முழுவதும் பறந்து சென்றன.

சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்த பலத்த மழை மற்றும் கடும் காற்றினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று, யான் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, லெப்டினன்ட் முஹமட் ஜூல் இஸி சுல்கிஃப்லி கூறினார்.

“பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்காணிக்கவும், சம்பவத்தில் தொடர்புடைய முழு வீடுகள் தொடர்பான விபரங்களை பதிவு செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை, பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கவைக்கப்படவில்லை, இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் அருகிலுள்ள அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here