பிரதமராக பதவியேற்ற பின் முதன்முறையாக சீனா பயணமாகிறார் அன்வார்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று முதல் முறையாக சீனா பயணமாகிறார்.

சீனாவில் நடைபெறும் ஆசியாவின் வருடாந்திர போவோ மாநாட்டில் (BFA) உரை நிகழ்த்துவதற்காக பிரதமர் சீனாவின் தென் தீவு மாகாணமான ஹைனானுக்கு இன்று செல்கிறார்.

பிரதமர் இன்று நண்பகல் 3 மணியளவில் Qionghai Boao அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவரது குழுவில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு BFA 2023 இல் ஏனைய நாட்டு தலைவர்கள் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், கஜகஸ்தானின் அலிகான் ஸ்மைலோவ், ஐவரி கோஸ்ட்டின் பேட்ரிக் ஜெரோம் ஆச்சி மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here