அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதுதொடர்பாக புலாஸ்கி கவுன்டி பகுதியைச் சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நேற்று மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால் அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார். அப்பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் பாதிப்படைந்து இருக்கக்கூடும் என தெரிவித்தார்.

டென்னிசி மாகாணத்தில் 7 பேர், வின், அர்கனாஸ் நகரங்களில் 4 பேர், சுல்லிவன், இண்டியானா நகரங்களில் 3 பேர், இல்லினாய்ஸ், அலபாமா, மிச்சிபி மற்றும் லிட்டில் ராக் பகுதியில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here