வங்கி ஏடிஎம் அறையில் 30 நிமிடங்கள் சிக்கி கொண்ட ஆடவர்கள்

மெர்சிங்: ஒரு வங்கியின் தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திர பகுதியில் இன்று அதிகாலை கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சிக்கிக்கொண்டதைக் கண்டு இரண்டு ஆடவர்கள் கவலையான தருணங்களைச் சந்தித்தனர்.

வங்கியின் தானியங்கி ரோலர் ஷட்டர் கதவு மூடப்பட்டதையடுத்து, ஏடிஎம் அறையில் ஆண்கள் சிக்கிக் கொண்டதாக நள்ளிரவு 12.10 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக மெர்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர்  அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் ரோந்து குழுவை அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஈடுபட்டனர். எவ்வாறாயினும், 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷட்டர் கதவைத் திறக்க வங்கி ஊழியர்கள் வந்த பிறகு இருவரும் வெளியேறினர் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

வங்கிகளின் ஏடிஎம் பகுதி செயல்படும் நேரம் மற்றும் அதன் தானியங்கி ஷட்டர் கதவுகள் இறங்கும் சரியான நேரம் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அப்துல் ரசாக் அறிவுறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here