தொழிலாளர், கட்டுமானப் பொருள் பற்றாக்குறை காரணமாக பாபார் மருத்துவமனையின் மேம்பாடுகளில் தாமதம் – டாக்டர் ஜாலிஹா

கோவிட்-19 தொற்று நோய் பரவல், தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால், பாபார் மருத்துவமனையின் மேம்படுத்தும் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்படக் காரணம் என்று, டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

கடந்த மே 2017 இல் தொடங்கப்பட்ட மேம்படுத்தல் செயல்முறை தற்போது 62 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

தற்போது “70 விழுக்காடு நிறைவடையும் என்ற எங்களின் எதிர்பார்ப்பில் இருந்து சற்று பின்தங்கியிருந்தாலும், இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சுகாதார அமைச்சகம், பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற தரப்பினரிடையே கலந்துரையாடல்கள் மற்றும் கண்காணிப்பை நாங்கள் தொடர்வோம்,” என்று, இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) இங்குள்ள பாபார் மருத்துவமனையில் உள்ள திட்டப் பகுதியை பார்வையிட்ட பிறகு, டாக்டர் ஜாலிஹா செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here