கமலுடன் இணையும் நயன்தாரா?

கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச்234’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானல் இதன் மூலம் நயன்தாரா முதல் முறையாக கமலுடன் இணைவார்.  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here