வரவிருக்கும் சிலாங்கூர் தேர்தலுக்காக பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையேயான இட ஒதுக்கீடு விவாதங்கள் வரவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
“நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவை மீண்டும் தொடங்கும், அனைவரும் ஒருமித்த கருத்தை எட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் கூறினார்.
அந்தந்த கட்சிகளின் பொறுப்பாளர்கள் தமது வசம் வைத்திருக்கும் அனைத்து இடங்களும் தற்போதைய நிலையிலேயே இருக்கும் என்பதுதான் இதுவரையிலான ஒப்பந்தம் என்று அவர் கூறினார்.
எனினும் இது இறுதியான முடிவு அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“தேர்தலுக்கு முன் பக்காத்தான் மற்றும் பாரிசான் உயர்மட்ட தலைவர்களின் இறுதிக் கூட்டங்களை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.










