இந்த ஆண்டு நோன்புப் பெருநாளுடன் இணைந்து வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) கூடுதல் பொது விடுமுறையாக ஜோகூர் அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு விடுமுறைகள் சட்டம் 1951 (சட்டம் 369) பிரிவு 8 மற்றும் 9 க்கு இணங்க செய்யப்பட்டது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி கூறினார்.
“ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தரின் ஒப்புதலுடன், ஜோகூர் மாநில அரசு ஏப்ரல் 24, 2023 (திங்கட்கிழமை) கூடுதல் பொது விடுமுறையாக அறிவிததாக அவர் கூறினார்.









