கூடாட் நீரிணையில் தென்பட்ட அரியவகை திமிங்கிலம்…!

சபாவின் வட கூடாட் மாவட்டத்தில் போர்னியோ முனை என்று பிரபலமாக அறியப்படும் சிம்பாங் மெங்காயாவ் நீரிணையில், சில நாட்களாக நீரைப் பீச்சியடிக்கும் திமிங்கிலம் தென்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) அதாவது நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் அந்த அரியவகை திமிங்கிலத்தைக் கண்டதாக உள்ளூர் கடல் முக்குளிப்பாளரான இவான் டான் கூறினார்.

“கடற்கரையில் இருந்து சுமார் 500 மீ தொலைவில் அந்த திமிங்கிலத்தை பார்த்தோம். நாங்கள் அதைக் கண்டபோது போர்னியோ முனையின் மலையில் இருந்தோம், ”என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) கூறினார்.

“திமிங்கலத்தின் வகை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அதன் நீளம் 20 அடி அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடுகிறோம்.

“திமிங்கலத்தின் புகைப்படங்களை எடுத்து, அதன் வகையை அடையாளம் காணக்கூடிய நிபுணர்களுக்கு அனுப்புவதன் மூலம் மட்டுமே இந்த விவரங்களை அறிய ஒரே வழி” என்று 50 வயதான அவர் கூறினார்.

இந்த திமிங்கலம் எங்கிருந்து வந்தது அல்லது ஏன் கூடாட்டில் உள்ளது என்பது குறித்தும் தெரியவில்லை . “ஒருவேளை அப்பகுதியில் காணப்படும் நல்ல உணவு காரணமாக இருக்கலாம் என்று டான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here