மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த தம்பதியர் போலீசில் சரண்

கோத்த பாருவில் திங்கள்கிழமை (ஏப்ரல் 24) மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஆபத்தான ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த கணவன்-மனைவி இரண்டு நாட்களாக காணாமல் போன நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணியளவில் கோத்த பாரு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தங்களைத் தாங்களே ஒப்படைத்தனர்.

17 மற்றும் 16 வயதுடைய சந்தேக நபர்கள் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் 4ஆவது பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய இருவருமே பொறுப்பற்ற முறையில் சவாரி செய்ததற்காக, தங்களுக்கும் மற்ற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42(1) இன் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சந்தேக நபர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், ரிங்கிட் 5,000க்கு குறையாத அபராதமும் ரிங்கிட் 15,000க்கு மிகாமலும் விதிக்கப்படலாம் என்றார்.

முன்னதாக, சந்தேக நபர்கள் “வீலி” (தரையில் இருந்து முன் சக்கரத்தை உயர்த்தி மோட்டார் சைக்கிள் ஓட்டும் தந்திரம்) இழுக்கும் 28 நிமிட வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து அவர்களை போலீசார் தேடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here