பேராக்கில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 367.7 விழுக்காடு சம்பவங்கள் அதிகரிப்பு

பேராக் மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 1,202 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 257 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 945 வழக்குகள் அல்லது 367.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மாநில மனித வளம், சுகாதாரம் மற்றும் இந்திய சமூக விவகாரக் குழுத் தலைவர் ஏ.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 23 முதல் 30 வரையிலான 17வது வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 72 ஆகக் குறைந்துள்ளது.

“கணிக்க முடியாத மழை போன்ற காலநிலையைத் தவிர, பண்டிகைக் காலம் மற்றும் பள்ளி விடுமுறைகளும் மாநிலத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தன” என்று, இன்று பேராக் டாருல் ரிட்ஜுவான் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் கூறினார்.

எனவே ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here