1 கோடியே 40 லட்சம் பணி இழப்புகள் ஏற்படும்

உலகளவில் 23 சதவீதம் வரை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தினால்  வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.  உலகில் அனைத்துத்துறைகளிலும் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் புகுந்துள்ளது. இதனால்,  மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் கால்ஜினி நகரை தலைமையகமாகக் கொண்ட உலகப் பொருளாதார மன்றம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டுகளில் உலகளவில் இருக்கும் மொத்த வேலை வாய்ப்புகளில் 23 சதவீதம் வரை செயற்கை தொழில் நுட்பத்தினால் பாதிப்படையும்.
இதனால், 1 கோடியே 40  லட்சம் பணி இழப்புகள் ஏற்படும், 8 கோடியே 30 லட்சம் வேலைகள் இல்லாமப் போகும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தினால்,  அலுவலகப் பணி, தொழிற்சாலை மற்றும் விற்பனையக பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும்,  கோடியே 90 லட்சம் பணிகள் மட்டும் உருவாகும் என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here