பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார்

நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை அவரது தங்கை மறுத்தார்.

இந்த நிலையில் ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர். மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். சரத்பாபு ஏஐஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here