A-G Report தொடர்பில் MACC-யில் புகார் செய்யுமாறு HRD Corb க்கு உத்தரவு- மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர்:

A-G Report எனப்படும் கணக்கு தணிக்கை அறிக்கை தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) புகார் செய்யுமாறு HRD Corpற்கு மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

HRD Corp-பின் கணக்குத் தணிக்கை அறிக்கை தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மனிதவள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி, HRD Corp தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாஹுல் தாவூட் ஆகியோருக்கு எதிராக MACCயில் புகார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ல் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அவர் சொன்னார்.

முன்னதாக சந்தேகத்திற்கிடமான ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள முதலீடுகள் ஆகியவை HRD Corp பற்றிய அதன் அறிக்கையில் பொதுக் கணக்குக் குழு (PAC) கண்டறிந்த சில குறைபாடுகள் என்று அவர் சொன்னார்.

பிப்ரவரி 2021 இல் மெனாரா இக்லாஸை RM202.5 மில்லியனுக்கு வாங்குவது அத்தகைய ஒரு ஒப்பந்தமாகும், அங்கு கிரிஸ்டல் கிளியர் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு ரிம120 மில்லியன் டெபாசிட் செலுத்தப்பட்டது.

“இது கட்டிடத்தின் கொள்முதல் விலையில் 50% அதிகமாக இருந்தது, ஆனால் கொள்முதல் இறுதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் HRD Corp தலைவர் டத்தோ ராஜசேகரன் ராமசாமி, குறித்த RM120 மில்லியன் டெபாசிட் RM3.2 மில்லியன் வட்டியுடன் திருப்பி அளிக்கப்பட்டது என்றார்.

இந்நிலையில் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை பின்பற்றி, தனக்குக் கீழ் உள்ள நிறுவனங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதைத் தாம் தடுக்கவில்லை என்று ஸ்டிவன் சிம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here