மங்கோலியாவில் பனிப்புயல் காரணமாக 3 இலட்சம் கால்நடைகள் உயிரிழப்பு

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சுக்பாதர் மற்றும் கென்டி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பெய்த கனமழையில் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மின்சாரம் இல்லாததால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. இதற்கிடையே கால்நடை மேய்க்க சென்ற 130-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வந்தது. அதன்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 125 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 2 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சுமார் 2.90 இலட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here