இந்த ஆண்டு 7 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கிறது கிளாந்தான்

கிளாந்தான் மாநில அரசாங்கம் இந்த ஆண்டு ஏழு மில்லியன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களின் வருகையை இலக்காகக் கொண்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் அடிப்படையில், இந்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று, கலாசாரம் மற்றும் சுற்றுலாப் பிரிவின் முதன்மை துணைச் செயலாளர், நிக் அகமட் ஷாஸ்வான் நிக் முகமட் கூறினார்.

“2021 ஆம் ஆண்டில், கிளாந்தான் அரசாங்கம் ஆறு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருந்தது, ஆனால் அந்த நேரத்தில் உலகைத் தாக்கிய தொற்றுநோய் காரணமாக அதை அடைய முடியவில்லை.

“இறைவனின் ஆசியுடன் தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் இந்த ஆண்டு ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அவர் பெர்லிஸ்-கிளாந்தான் கிராஸ் கலாச்சார விழாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here