உலகமே பாராட்டும் இந்திய மாணவி! புகழ்ந்து தள்ளிய Apple சிஇஓ! யார் அந்த மாணவி?

இந்திய மாணவியின் ஐடிராக்கர் ஆப்பை (EyeTrack App) கண்டு வியந்துபோன ஆப்பிள் சிஇஓ டிம் குக் (Apple CEO Tim Cook), அந்த மாணவியை வீடியோ காலில் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். இந்த மாணவி யார்? அவரது கண்டுபிடிப்பு என்ன?.

இதுகுறித்து விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு. உலகம் முழுவதும் 30 நாடுகளில் ஆப்பிள் நிறுவனமே நேரடியாக நடத்திய “ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச்” என்னும் ஆப் உருவாக்கும் போட்டியில், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்மி ஜெயின் வெற்றி பெற்று மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார்.

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கும், தனது தோழியின் உறவினருக்கு உதவும் நோக்கத்தில் கண்டுபிடித்த ஆப், இப்போது, அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சேர்ந்துள்ளது, என்று சொன்னால் கேட்போருக்கு சற்று வியப்பாகவே இருக்கும்.

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அனைத்து ப்ராடக்ட்களிலும் ஐஓஎஸ் (iOS), ஐபாட்ஓஎஸ் ( iPadOS), மேக்ஓஎஸ் (macOS), டிவிஓஎஸ் (tvOS), வாட்ச்ஓஎஸ் (watchOS) மட்டுமே பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஓஎஸ் (OS) ஸ்விஃப்ட் (Swift) புரோகிராமிங் லாங்குவேஜ் (Programming Language) என்னும் கப்ம்பூட்டர் கோடிங் மூலம் உருவாக்கப்படுகிறது.

இந்த ஸ்விஃப்ட் கோடிங் லாங்குவேஜ் (Swift Coding Language) அவ்வளவு எளிதானது கிடையாது. இருப்பினும், இந்த கோடிங் குறித்து உலகம் அறிந்துகொள்ளும் நோக்குடன் ஆப்பிள் நிறுவனம், அந்த கோடிங் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கென பிரத்யேகமாக ஆப் உருவாக்கும் போட்டியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இந்த போட்டிக்கு ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் (Apple Swift Student Challenge) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் போட்டியானது, உலகம் முழுவதும் 30 நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழங்கள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமே நடத்தப்படும். மொத்தமாக 375 மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், சுகாதாரம் (Healthcare), விளையாட்டு (Sports), பொழுதுபோக்கு (Entertainment), சுற்றுச்சூழல் (Environment) ஆகிய துறைகளின் கீழ் ஆப் உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்விஃப்ட் கோடிங் லாங்குவேஜ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டியில் டாப் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here