புக்கிட் சாகாவில் நடைப்பயணம் மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்த வாலிபர் பாதுகாப்பாக மீட்பு

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) புக்கிட் சாகாவில் நடைபயணம் மேற்கொண்டபோது மயங்கி விழுந்த 16 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.

சம்பவம் தொடர்பில் காலை 9.36 மணிக்கு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.

உடனே அங்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள், மலையேற்றப் பாதையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்தனர். அப்போது, அவர் சுயநினைவின்றி இருந்தார் அத்தோடு அவரது தலை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டிருந்தது,” என்று முகமதுல் எஹ்சான் கூறினார்.

“அவரை மலையிலிருந்து கீழே கொண்டு வந்து மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர், அங்கு அவர் சிகிச்சை பெற்றார்,” அத்தோடு சிறுவன் தற்போது சீராக உள்ளார் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here